Advertisment

சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதிய பைக்! 

A bike that hit a car parked on the side of the road!

பைக் ரேஸில் ஈடுபட்டபோது, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளாகும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.

Advertisment

கேரள மாநிலம், கோட்டையூர் பகுதியில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த காரின் பின் பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தை ஒட்டிய நபர் காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும், காரின் முன் நின்றுகொண்டிருந்தவர்களுக்கும் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான, சி.சி.டி.வி. காட்சிகள் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe