/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pm3 (1).jpg)
பீகார் மாநிலத்தில் நகர்ப்புற உள்கட்டமைப்பு குறித்த 7 திட்டங்களை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
குடிநீர் விநியோகம், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களைரூபாய் 541 கோடி மதிப்பில்,பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pm1 (2).jpg)
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டைக் கட்டமைப்பதிலும், உலகைக் கட்டமைப்பதிலும் நமது பொறியாளர்கள் வரலாறு காணாத பங்களிப்பை அளித்துள்ளனர். வேலைக்கான அர்ப்பணிப்பில் ஆகட்டும் அல்லது நுணுக்கமான பார்வையில் ஆகட்டும், உலகத்தில் பொறியாளர்களுக்கு என்று தனித்த அடையாளம் உள்ளது.
மத்திய, பீகார் அரசுகளின் கூட்டு முயற்சிகளின் மூலம் குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற அடிப்படை வசதிகள் பீகாரின் நகரங்களில் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன. கடந்த நான்கைந்து வருடங்களில் பீகாரில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் குடிநீர் வசதியோடு இணைக்கப்பட்டுள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_19.png)
கடந்த ஒருவருடத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் நாடுமுழுவதும் 2 கோடி தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன." இவ்வாறு பிரதமர் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)