மக்களவை தேர்தல் முடிந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது.

Advertisment

bihar stands first in nota vote percentage

இந்நிலையில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் நோட்டாவுக்கு 8 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த மக்களவை தேர்தலிலேயே அதிக வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்த மாநிலம் இது தான். பிஹாரில் நோட்டாவுக்கு பதிவான 8 லட்சம் வாக்குகளில் அதிகபட்சமாக கோபால்கஞ் பகுதியில் மட்டும் 51,660 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது குறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கையில் சரியான அரசோ, கட்சியோ, வேட்பாளர்களோ எங்களுக்கு இல்லை. எனவே நாங்கள் நோட்டாவிற்கு வாக்களித்தோம் என தெரிவித்துள்ளனர். பீகாருக்கு அடுத்து ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நோட்டா அதிக வாக்குகள் வாங்கியுள்ளது. தமிழகத்தில் 5,41,150 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.