bihar nepal border incident

Advertisment

இந்திய நேபாள எல்லையில் நேபாள போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர்பலியாகியுள்ளார், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்தியா-நேபாள எல்லைக்கு அருகிலுள்ள சீதாமாரியில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார், இருவர் காயமடைந்தனர் என்று பீகார் சாஷாஸ்திர சீமா பால் ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.

காலை 8:40 மணியளவில் பீகாரைச் சேர்ந்த ஒரு குடும்பம் நேபாளத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்திய நேபாள எல்லையில் பாதுகாப்புப் படையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்தக் குடும்பத்தினரை திரும்பிச் செல்லும்படி நேபாள போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தக் குடும்பத்தினருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து சுமார் 15 முறை சுட்டுள்ளார். இதில், அந்த குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் உயிரிழந்தார். எல்லைப்பிரச்சனை காரணமாக இருநாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவமபதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.