மூன்று துறைகளில் அரசாங்க பணி... 30 ஆண்டுகளாக அரசு பணத்தை சுருட்டியவர் கைது!

பீகார் மாநிலம் கானாசாகிப் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் ராம். இவர் ஒரே நேரத்தில் மூன்று அரசாங்க பணிகளில் பணிபுரிந்து வருவதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. புகாரை விசாரித்த அதிகாரிகள் மூன்று அரசு பணியிலும் ஒரே பெயர், ஒரே விலாசத்தைச் சேர்ந்த நபர் பணிபுரிவதை உறுதி செய்த அதிகாரிகள், சுரேஷ் ராமை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் சுரேஷ் ராம் விசாரணைக்கு வராமல் தலைமறைவானார். அவரை தேடி பிடித்து கைது செய்த போலீஸார் அவரை விசாரித்தபோது தான், 30 வருடங்களாக இவ்வாறு மூன்று அரசு பணிகளில் பணியாற்றி சம்பளம் வாங்கிவந்தது தெரியவந்துள்ளது.

df

எப்படி 30 வருடங்களாக மூன்று இடங்களில் அரசு பணியில் இருந்துள்ளார் என்று அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதிகாரிகளின் உதவி இல்லாமல் இது சாத்தியப்பட வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். போலிசாரின் விசாரணைக்கு பிறகே இதுகுறித்த உண்மையான தகவல் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலி முகவரியை கொடுத்து மூன்று துறைகளில் ஒருவர் பணி புரிந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

officials
இதையும் படியுங்கள்
Subscribe