/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bihar-dad-std.jpg)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் ரத்தன் தாகூர் என்ற தனது மகனை இழந்த பீகாரை சேர்ந்த ஒரு தந்தை, இந்த தாக்குதல் குறித்த தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறும்போது, 'எனது ஒரு மகனை தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் இழந்துவிட்டேன். இந்திய தாய் நாட்டிற்காக எனது மகனை நான் இழந்திருக்கிறேன், இருப்பினும் நமது நாட்டிற்காக எனது இன்னொரு மகனையும் ராணுவத்திற்கு அனுப்புவேன். ஆனால் நான் கேட்பது ஒன்றே ஒன்று தான், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை மட்டும் சரியான பாடத்தை கற்று தாருங்கள்' என கூறியுள்ளார். தீவிரவாதிகளிடம் தனது மகனை இழந்த இந்த தந்தையின் பேட்டி தற்போது பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)