Advertisment

எருமை மாட்டு கொம்பை பாலிஷ் செய்வதாக கூறி ஊழல்... முன்னாள் முதல்வருக்கு எதிராக புதிய தகவல்களை வெளியிட்ட பீகார் அரசு..

எருமை மாடுகளின் கொம்புகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறி கடுகு எண்ணெய் வாங்கியதில் லாலு பிரசாத் யாதவின் அரசில் 17 லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக பீகார் அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

bihar government's report about scam done by lalu prasad yadav

1990 முதல் 1996 வரை லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்தார். அப்போது மாட்டுத்தீவனம் வாங்கியதில், மிகப் பெரிய அளவு ஊழல் நடந்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்குஇந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இதற்கு முந்தைய பீகார் அரசுகளில் நடந்த ஊழல்கள் குறித்து நிதிஷ் குமாரின் அரசு விசாரணைகள் மேற்கொண்டு வந்தது. அதன்படி லாலு பிரசாத் முதல்வராக இருந்த போது எருமை மாடுகளின் கொம்பினை பாலிஷ் செய்ய கடுகு எண்ணெய் வாங்கியதாக கூறி 17 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றங்சாட்டப்பட்டுள்ளது. மேலும் மாட்டு தீவனத்தில் கலப்பதற்காக ரூ.154 கோடிக்கு மக்காசோளம் வாங்கியதிலும் ஊழல் நடந்ததாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், லாலு முதல்வராக இருந்த காலகட்டமாக 1995-96 ஆம் ஆண்டுகள் காலகட்டத்தில், ₹ 116 கோடி அரசு கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்பணம் எங்கு சென்றது என்பதற்கு எந்த ஆவணமும் இல்லை எனவும் அரசு கூறியுள்ளது.

Fodder Scam nithish kumar Lalu prasad yadhav Bihar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe