/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2-2_72.jpg)
இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்டசில காரணங்களுக்காக நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புநடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பீகாரில் முதல்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பீகாரில் இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்டநிலையில், முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.
இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் கட்ட பணிகள் இந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி அடுத்த(மே) மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனால் சாதியில் எத்தனை உட்பிரிவு இருந்தாலும், அவர்கள் அனைவரும் அந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட எண்ணில்தான் கணக்கிடப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை சாதிவாரி கணக்கெடுப்பில் ஒரு சாதி என்று வகைப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கணக்கெடுப்பில் அவர்களுக்கு 22 என்ற எண்ணானது ஒதுக்கப்பட்டு அதற்குள் அவர்களை உள்ளடக்கியுள்ளனர். இதற்கு பீகாரில் உள்ளசமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)