Advertisment

'கொண்டாட்டம் வேண்டாம்' மூன்று கோடி வாக்குகள் இன்னும் எண்ணப்படவில்லை! -தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அறிவிப்பு

jkl

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில், இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும் இந்த தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றது.

Advertisment

243 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு, 55 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. ஆர்ஜேடி கூட்டணி 106 இடங்களிலும், பாஜக கூட்டணி 127 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகின்றது. தற்போதைய நிலையில் யார் ஆட்சியில் அமருவார் என்பது கணிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "கரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக வாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வாக்கு எண்ணிக்கை பொறுமையாக நடைபெற்று வருகிறது. மொத்தம் பதிவான 4.10 கோடி வாக்குகளில் இதுவரை ஒரு கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. எனவே இன்னும் 3 கோடி வாக்குகள் எண்ணப்பட வேண்டியிருக்கிறது. இதனால் தேர்தல் முடிவு வெளியாக சற்று காலதாமதம் ஆகும்" என்று தெரிவித்துள்ளது.

Advertisment

election commission
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe