Advertisment

நொடிக்கு நொடி மாறும் பீகார் தேர்தல் முடிவுகள்! - பாஜக தொடர்ந்து முன்னிலை

்ு

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டு பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

Advertisment

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில், இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும் இந்த தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றது. 243 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு, 55 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. ஆர்ஜேடி கூட்டணி 101இடங்களிலும், பாஜக கூட்டணி 131இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

Advertisment

Bihar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe