Skip to main content

பீகார் சட்டமன்ற தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...

Published on 10/11/2020 | Edited on 10/11/2020
jkl

 

 

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.

 

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டது. இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கும் இந்த தேர்தல் முடிவு, இன்னும் சில நிமிடங்களில் வெளியாக உள்ளது. முதற்கட்டமாக தற்போது தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்