ADVERTISEMENT

'பீகார் தேர்தல்' வருவாரா லாலு... எதிர்பார்க்கும் ஆர்ஜேடியினர்!

09:28 AM Feb 14, 2020 | suthakar@nakkh…

விரைவில் வர இருக்கின்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பீகார் தேர்தலில் லாலு, நிதிஷ் குமார் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி அதிரடி வெற்றியை குவித்தது. அதனை தொடர்ந்து மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தது. இந்த ஆட்சி இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. லாலுவுக்கும், நிதிஷ் குமாருக்கும் பிரச்சனை ஏற்படவே பாஜகவுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். பாஜக நிதிஷ் குமார் கூட்டணியே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது.


ADVERTISEMENT


இந்நிலையில் அக்டோபரில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு வாழ்வா சாவா போராட்டமாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த தேர்தலில் பிராச்சாரம் செய்ய சிறையில் இருக்கும் லாலு பிரசாத்துக்கு ஜாமீன் கிடைக்கும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். ஜாமீன் கிடைத்தால் பிரச்சாரம் தொடர்பான இறுதி முடிவை கட்சி தலைமை எடுக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT