bihar deputy cm race and sushil modi's stand

Advertisment

துணை முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவரின் கருத்துக்கு பதிலளித்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நிதிஷ்குமார் இல்லத்தில் தேசிய ஜனநாயககூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மகாராஷ்ட்ர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 7-வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராகப் பதவியேற்கிறார். மேலும், துணை முதல்வர்களாக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் இருவரும் முறையே பீகார் மாநில பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போதைய துணை முதல்வரான சுஷில் குமார் மோடிக்கு பொறுப்பு வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சுஷில் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பாஜக மற்றும் சங் பரிவார் ஆசியுடன் கடந்த 40 ஆண்டுகாலமாக அரசியலில் இயங்கி வருகிறேன். கட்சிதொண்டர் என்ற பொறுப்பை யாரும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது’’ எனக் கூறியுள்ளார். இந்நிலையில் அவரின் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “மதிப்பிற்குரிய சுஷில் குமார் மோடி, நீங்கள் ஒரு தலைவர், துணை முதல்வராக இருக்கிறீ்ர்கள். எதிர்காலத்திலும் பாஜகவில் தொடர்ந்து தலைவராகவே இருப்பீர்கள். ஒருவர் வகிக்கும் பதவியால் அவரது நிலை தீர்மானிக்கப்படுவதில்லை" எனக் கூறியுள்ளார்.