Advertisment

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் இழப்பீடு - ஒப்புதல் அளித்த பீகார் அமைச்சரவை!

corona

கரோனாவால்இந்தியாவில் நான்கு லட்சத்திற்கும்மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கைவிசாரித்த உச்ச நீதிமன்றம், கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள், கரோனாவால்பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாயைஇழப்பீடாக வழங்க முடிவு செய்து, அதற்கான நடைமுறைகளை தொடங்கியுள்ளன. இதற்கிடையே பீகார் மாநிலம், கரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

Advertisment

இந்தநிலையில்இன்று நடைபெற்ற பீகார் அமைச்சரவை கூட்டத்தில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

pandemic relief Bihar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe