மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைத்திருக்கிறது பாஜக.

Advertisment

bihar bjp mps donate 25 lakh rupees each for building picu in sadar hospitals

கடந்த 17 ஆம் தேதி மக்களவை உறுப்பினர் பதவியேற்று கொண்ட நிலையில், பீகாரை சேர்ந்த 17 பாஜக எம்.பி க்கள் தங்கள் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தலா 25 லட்சம் நன்கொடையாக தர உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநில பாஜக வின் தலைவரான நித்யானந்த் ராய் இது குறித்து கூறுகையில், "பீகாரில் இருந்து தேர்வான 17 பாஜக எம்.பி க்களும் தங்களது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு கட்டுவதற்காக தலா 25 லட்ச ரூபாய் தர உள்ளனர்" என தெரிவித்தார். பாஜக எம்.பி க்களின் இந்த முடிவு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.