பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 17 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில், 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்டதேர்தலில் சுமார் 2.86 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இரண்டாம் கட்டத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 46 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 56 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 24 இடங்களிலும் போட்டியிடுகின்றன.