kl;

Advertisment

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் இன்று காலை நடைபெற்றது. இன்று காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள். 17 மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில், 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 2.86 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இரண்டாம் கட்டத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 46 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 56 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 24 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், மாலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 53.51 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குச் சதவீதம் முன் எப்போதும் இல்லாத அளவில் மிகக் குறைவாகப பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.