"அவன் என்னுடைய ஆளு..." - ஒரு ஆணுக்காக அடித்துக்கொண்ட 5 பெண்கள்; வைரலாகும் வீடியோ

bihar 5 women fight for one boy friend

ஒரு பெண்ணுக்காகவோ அல்லது ஒரு ஆணுக்காகவோஇரண்டுபெண்களோ அல்லதுஆண்களோ சண்டை போட்டுக்கொள்ளும்சம்பவங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பீகாரில் ஒரு ஆணுக்காக 5 பெண்கள் ஒரே நேரத்தில் சண்டை போட்டு, மாறி மாறி தாக்கிக்கொள்ளும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலம்,சோன்பூரில் ‘நான் அவன் இல்லை’படத்தில் வரும் ஜீவனை போல ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் 5 பெண்களைக்காதலித்து வந்துள்ளார். ஆனால், ஒருவரைக் காதலிப்பது மற்றவருக்கு தெரியாமல் ஏமாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில், அந்த இளைஞர் தன்னுடைய 5 காதலிகளில் ஒருவரைமட்டும் அழைத்துக் கொண்டு, அவரது ஊரில் நடைபெற்ற பொருட்காட்சிக்குச் சென்றுள்ளார். அப்போதுஅந்த இளைஞரின்மற்றொரு காதலி, ‘என்னடா நம்ம ஆளு வேறு ஒருபொண்ணோடபோறானே’ என்றுஅதிர்ச்சியடைந்து அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அந்த வழியாகச் சென்ற இளைஞரின் இன்னொரு காதலி பார்க்க, ‘யாரு இவ நம்ம லவ்வர் கூட சண்டை போட்டுட்டு இருக்கா’ என்றுஅவரும்களத்தில்இறங்கி சண்டை போடத்தொடங்கியுள்ளார். இப்படியாக இளைஞரின் 5 காதலிகளும்ஒரே இடத்தில் எதிர்பாராமல் வந்து விட,அவன் எனக்குத்தான் என்று ஒருவரை ஒருவர் மாறி மாறி தலைமுடியைப் பிடித்துத்தாக்கிக்கொண்டனர். இந்தச் சண்டையில் இளைஞர் தனது காதலிகளை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் கூட, எந்தவிதசமரசத்திற்கும் இடமில்லை என்று சரமாரியாகத்தாக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தை அங்கிருந்தபொதுமக்கள் செல்போனில்படம்பிடித்து சமூக வலைதளத்தில்வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது.

Bihar boyfriend Womens
இதையும் படியுங்கள்
Subscribe