பீஹார் காப்பகசிறுமிகள் 34 பேரைபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில்கைதுசெய்யப்பட்ட முதன்மை குற்றவாளியான காப்பகத்தின் உரிமையாளர்பிரிஜேஷ் தாக்கரிடம்இருந்து சுமார் 40 பேர்களின் தொலைபேசி எண்களை கையால் எழுதிவைக்கப்பட்டிருந்த தாள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பீஹாரில் காப்பகம் ஒன்றில் கிட்டத்தட்ட 34 சிறுமிகள் காப்பக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் பாலியல் கொடுமைசெய்யப்பட்ட சம்பவம் ஏற்கனவே பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பீஹாரில் முஸாபர்பூரில் அரசு நிதியுதவியுடன் இயங்கிவந்த தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் சுமார் 7 வயதுமுதல் 17 வயதுடைய 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் காப்பக ஊழியர்கள், அதிகாரிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 10-க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாட்டையே உலுக்கிய இந்தசம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மொத்தம் இருதுவரை 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்தது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக6 பெண்கள் உட்பட 10 பேரை போலீசார் ஏற்கனவேகைது செய்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியானபிரிஜேஷ் தாக்கர்எனும் கொடூரனை அண்மையில் கைது செய்தனர்.அதேபோல்மர்ம வழியை பயன்படுத்தி கொடூரர்கள் உள்ளே புகுந்து அடிக்கடி சிறுமிகள் மீதுபாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியதையும் போலீசார் கண்டறிந்தனர்.
முஸாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபிரிஜேஷ் தாக்கர் பார்வையாளர் அறையில் இருந்த பொழுதுபிரிஜேஷ் கையில் இரண்டு தாள்கள் இருந்ததை கண்டறிந்த போலீசார் அந்த தாளை அவனிடம்இருந்து போலீசார் கைப்பற்றினர். அந்த தாளில் கிட்டத்தட்ட 40 பேர்களின் தொலைபேசி எண்கள் கையால் எழுதப்பட்டிருந்தது. அந்த தாளில் பல பிரமுகர்கள் மற்றும் ஒரு அமைச்சர் எண்ணும் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த தாள்கள் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.