ghjhghg

Advertisment

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது பலத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக மக்களிடையே பிரபலமான நடிகர்கள்களை தங்கள் கட்சி வசம் இழுப்பதற்காக முயற்சி செய்து வருகின்றன. பாஜக ஏற்கனவே அஜித், மோகன்லால் என வலைவீசி பார்க்க, இதே பார்முலாவை காங்கிரஸும் கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்திய அளவில் மிக பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தி பதிப்பில் 11 வது சீசனில் வெற்றி பெற்ற ஷில்பா ஷிண்டே காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 41 வயதான இவர் வட இந்தியாவில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் இவர் போட்டியிடவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.