Advertisment

”நீங்களே வெளியேற வேண்டும் என்றால் 50 லட்சம் கொடு”- பிக்பாஸ் வைக்கும் செக்!!!!

sree santh

தமிழில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இது தமிழகத்தில் சக்கைபோடு போடுகிறது. அதேபோல இந்த நிகழ்ச்சி இந்தியாவில் முதன் முதலில் ஹிந்தி மொழியில்தான் தொடங்கப்பட்டது. தற்போது ஹிந்தியில் பிக்பாஸ் 12வது சீஸனை தொட்டுவிட்டது. தமிழைவிட ஹிந்தியில் பல சர்ச்சையான விஷயங்கள் கொண்டது இந்த நிகழ்ச்சி. இந்த ஹிந்தி பிக்பாஸ் 12வது சீஸனில் சர்ச்சை வீரரான ஸ்ரீசாந்தும் ஒரு போட்டியாளராக இருக்கிறார்.

Advertisment

இந்நிலையில், ஸ்ரீசாந்த் புதிதாக ஒரு பிரச்சனையையும் கிளப்பியிருக்கிறார். செய்வாய் அன்று நடந்த பிக்பாஸ் போட்டியில் சக பென் போட்டியாளருடன் பேசிகொண்டு இருக்க, பின்னர் இருவரும் வாயால் சண்டை போட்டுக்கொள்ள தொடங்கினர். ஒருகட்டத்தில் சண்டை எல்லைமீற கோபமான ஸ்ரீசாந்த், பிக்பாஸ் வீட்டு வாசல் முன்பு வந்து, ”நான் இந்த நிகழ்ச்சியைவிட்டு வெளியேறுகிறேன். பிக்பாஸ் கதவை திறந்துவிடுங்கள்” என்பதுபோல மிரட்ட தொடங்கினார். அவருடன் இருக்கும் சக போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினார்கள்.

Advertisment

இந்நிலையில், ஸ்ரீசாந்த் சொந்தமாகவே வெளியேற வேண்டுமானால் அவர் கலர் தனியார் நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேணடும் என்று சொல்வதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. இது ஸ்ரீசாந்துக்கு பிக்பாஸ் மூலம் கிடைக்கின்ற தொகையைவிட பெருமடங்கு அதிகம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

bigboss hindi Sreesanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe