Skip to main content

கிழக்கு இந்தியாவில் ரூ.200 கோடி முதலீடு... - பிக் பஜார்

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

பியூச்சர் குழுமத்தின் நிறுவனமான பிக்பஜார், கிழக்கு இந்திய பகுதிகளில் ரூ.200 கோடி முதலீட்டில் புதிதாக 25 கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

big bazaar

 

புதிய கடைகளுக்கான பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கப் படும் என்றும், இதில் மொத்தம் 25 கடைகளைத் திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இதுகுறித்து பியூச்சர் நிறுவனத்தின் கிழக்குப் பகுதி தலைமை செயல் அதிகாரியான மணிஷ் அகர்வால, “இந்தியாவின் மொத்த விற்பனையில் 25 சதவீதம் பங்கு கிழக்கு இந்திய பகுதிகளில் இருக்கின்றன.
 

இந்தப் பகுதிகளில் மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா ஆகிய இடங்களில் இருந்து வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது. மொத்த வருவாயில் மேற்கு வங்கம் மட்டும் 30 சதவீதம் பங்கு வகிக்கிறது. எனவே, எங்கள் நிறுவனம் கிழக்கு இந்திய பகுதிகளில் 25 பிக் பஜார் கடைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது” என்றார். கொல்கத்தாவில் 7-8 கடைகளும், அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் 25 கடைகளும் திறக்கப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான் கொல்கத்தாவில் பிக் பஜார் தனது 17-வது கடையை திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்