bhiwandi building collapse toll raises

மஹாராஷ்ட்ராவின் பிவண்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்துவிழுந்த விபத்தில் உயிரிழப்புஎண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கடந்த திங்கள்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் இடிந்து விழுந்தது. எதிர்பாராத இந்த விபத்தால், அந்த குடியிருப்பில் வசித்துவந்த குடும்பங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்த தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றது.

Advertisment