Skip to main content

பீ.எச்.இ.எல் நிறுவனத்தின் நிகர இலாபம் 25% உயர்வு

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

 

bb

 

பொதுத்துறை நிறுவனமான பீ.எச்.இ.எல். நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டின் நிகர இலாபம் 25% சதவீதம் உயர்ந்துள்ளது. 

 

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.192 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் அடைந்த இலாபத்தைவிட ரூ.39 கோடி அதிகம். கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் இலாபம் ரூ.153 என பதிவு செய்யப்பட்டது. இது சதவீதத்தில் பார்க்கும்போது கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டைவிட இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 25% சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

நிறுவனத்தின் மொத்த நிகர இலாபம் கடந்த ஆண்டு 1.53 பில்லியன் அமெரிக்க டாலரென இருந்தது. இது இந்த ஆண்டு 1.92 பில்லியனாக உள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனா பரவல்; மூன்று நாட்களுக்கு 'பெல்' நிறுவனம் மூடல்..! 

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

Corona spread; Trichy BHEL  company closes for three days ..!


திருச்சி பெல் நிறுவனத்தில் தமிழகம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில், சுமார் 1,500 குடும்பங்கள் பெல் நிறுவன வளாகத்திற்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். தற்போது இவர்களில் 200 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் 1,500 குடும்பங்களுக்கும் பெல் நிறுவன மருத்துவக்குழு பரிசோதனை மேற்கொள்ளும் பணியைத் தொடங்கியுள்ளது. எனவே முதல் கட்டமாக இன்று முதல் வருகின்ற திங்கட்கிழமை வரை பெல் நிறுவனம் முழுமையாக மூடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகரித்தால் இந்த ஊரடங்கு காலத்தில் பெல் நிறுவனம் மூடுவதற்குக் கூடுதலான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

Next Story

மருத்துவப் பரிசோதனை நிறுத்தம் - ஓய்வு பெற்ற பெல் ஊழியர்கள் 30,000 பேர் தவிப்பு!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

thousands of BHEL employees struggling to get proper diagnosis at BHEL hospital

 

திருச்சி பெல் தொழிற்சாலையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சுமார் 30,000 பேர் உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். இது தொடர்பாக பெல் தொழிற்சங்கத் தலைவர் நடராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

 

"தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று ஊழியர்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டது தான் பெல் மருத்துவமனை, இந்த பெல் மருத்துமனையில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் மற்றும் அவரது மனைவிக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்பது விதிமுறையாகும்.”

 

“ஆனால் கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பெல் ஓய்வு பெற்ற ஊழியர்களை மருத்துமனைக்கு உள்ளே அனுமதிப்பது இல்லை. நுழைவுவாயிலிலேயே நிறுத்தி புறநோயாளிகள் போன்று மருந்து மட்டுமே வழங்கி வருகிறார்கள்.”

 

மருத்துவர்களுக்குக் கரோனா தொற்று பயம் இருந்தால் அவர்கள் பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து கொண்டு, நோயாளிகளைத் தகுந்த இடைவெளியில் நிற்க வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். மாநில அரசு மற்றும் ரெயில்வே மருத்துமனைகளில் இது போன்று தான் நோயாளிகளைப் பரிசோதனை செய்து மருந்து வழங்குகிறார்கள்.”

 

இதனைப் போன்று பெல் மருத்துமனையிலும் ஓய்வு பெற்ற பெல் ஊழியர்களுக்குச் சிகிச்சை அளிக்க பெல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையின் வழியாகக் கோரிக்கை வைத்துள்ளனர்.