Advertisment

எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு!

'Bharat Ratna' award announcement for LK Advani

Advertisment

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு (வயது 96) ‘பாரத ரத்னா’ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பொது வாழ்வில் அத்வானியின்பல ஆண்டு கால சேவையானது, அரசியல் நெறிமுறைகளில் ஒரு முன்மாதிரியான தரத்தை அமைத்து, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் குறிக்கப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை மேம்படுத்துவதற்கு அவர் இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம் ஆகும். அவருடன் பழகுவதற்கும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைத்ததை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்.

எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் தொலைபேசியில், இந்த விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவரான, இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத்தில் பணியாற்றியதில் இருந்து நமது துணைப் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்வது வரையிலான வாழ்க்கை அவருடையது. அவர் நமது உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் தன்னை சிறப்பித்துக் கொண்டார். நாடாளுமன்றத்தில் அவரது பங்களிப்பு எப்பொழுதும் முன்னுதாரணமானவை.வளமான நுண்ணறிவுகள் நிறைந்தவை” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும், பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe