Advertisment

கரோனா தடுப்பூசி: தன்னார்வலர் மரணம் - தடுப்பூசி நிறுவனம் விளக்கம்!

covaxine

Advertisment

இந்தியாவில்அனுமதியளிக்கப்பட்டுள்ள கரோனாதடுப்பூசிகளில் ஒன்றானகோவாக்சின் என்ற தடுப்பூசியை, மூன்றாவது கட்ட சோதனையின்போது செலுத்திக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ள பாரத்பயோடெக்நிறுவனம், இது குறித்து விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம், "தன்னார்வலர், தடுப்பூசி சோதனைக்காக பதிவுசெய்த நேரத்தில், மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு பங்கேற்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதற்கான அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்திருந்தார். மேலும் தடுப்பூசி செலுத்தியத்திலிருந்து ஏழு நாட்கள் கண்காணிப்பில், அவர் ஆரோக்கியமாகவும், எந்தப்பின்விளைவுகளும் ஏற்படாமல் இருந்தார். தடுப்பூசி செலுத்தப்பட்டு பூர்வாங்க மதிப்பாய்வுகள் நடந்தஒன்பது நாட்களுக்குப் பிறகு தன்னார்வலர் காலமானார். இது அவரின் மரணம் தடுப்பூசி ஆய்விற்கும் சம்பந்தமில்லாதது என்பதை குறிக்கிறது. அவர், ஆய்வுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொண்டாரா அல்லது மருந்தற்ற ஊசி (placebo) எடுத்துக்கொண்டாரா என்பது குறித்த தகவல்கள் இல்லாததால் உறுதிப்படுத்த முடியாது.

போபாலின் காந்தி மருத்துவக் கல்லூரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, இறந்தவருக்கு இதயம் செயலிழந்திருப்பதாகவும், அது விஷத்தினால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர் எனக் கூறியுள்ளது.

Volunteers coronavirus coronavirus vaccine
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe