Skip to main content

எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் பகவந்த் மான்!

Published on 13/03/2022 | Edited on 13/03/2022

 

kl;

 

பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அவர் சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பகவந்த் மான், "சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர் காலனியில் வரும் மார்ச் 16- ஆம் தேதி அன்று நண்பகல் 12.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும். பஞ்சாப் மாநிலம் முழுவதில் இருந்தும் பதவியேற்பு விழாவிற்கு மக்கள் வருவார்கள். இதுவரை எடுக்கப்படாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள அவர் நாளை தனது எம்.பி பதவியை ராஜினமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்