Advertisment

தேசிய கீதம் பாடி போராட்டக்காரர்களை அமைதியாக கலைத்த போலீஸ்! வைரல் வீடியோ

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வட மாநிலங்களில் கலவரம் உச்சத்தில் உள்ளது.

Advertisment

banglore police

இந்நிலையில் தென்னிந்திய மாநிலங்களில் மாணவர்களிடையே போராட்டம் சூடு பிடித்துள்ளது. நேற்று பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள், பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூருவில் நடிபெற இருந்ததால் பல முக்கிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல பெங்களூருவில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது.

Advertisment

இந்நிலையில், பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்க, காவலர் ஒருவர் போராட்டக்காரர்கள் மத்தியில் சிறிது நேரம் உரையாற்றிவிட்டு, இறுதியில் தேசிய கீதத்தை பாடியுள்ளார். தேசிய கீதம் முடிந்ததும் போராட்டக்காரர்களும் அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர்.

அது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Bengaluru caa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe