வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி 2500 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிவிட்டு துபாய்க்கு தப்பி சென்ற பிரபல நகைக்கடை அதிபர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஐ.எம்.ஏ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்த முகமது மன்சூர் கான், தன்னிடம் பணம் செலுத்தினால் அதிக வட்டி தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அவரது நிறுவனத்தில் பணம் செலுத்தியுள்ளனர். இதனையடுத்து சுமார் 2500 கோடி ரூபாய் பணத்தை மக்களுக்கு தராமல் ஏமாற்றிவிட்டு மன்சூர் துபாய்க்கு தப்பி சென்ற நிலையில், அவர் மீது 23,000 பேர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று துபாயிலிருந்து டெல்லி திரும்பிய அவரை, டெல்லி விமான நிலையத்திலேயே வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.