ADVERTISEMENT

வேலையிலிருந்து நீக்கப்பட்ட 500 ஐ.டி ஊழியர்கள்... தொடங்கிய லே ஆஃப் காலம்...

01:00 PM Apr 17, 2020 | kirubahar@nakk…


ஊரடங்கு காரணமாக உலகப் பொருளாதாரம் தேக்க நிலையைச் சந்தித்துள்ள சூழலில் பெங்களூருவில் 500 ஐடி ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் 13,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் மிகவேகமாகப் பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவைப்போல உலக நாடுகள் பலவற்றிலும் தொழில்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதன் எதிரொலியாகப் பல ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களுக்குச் சம்பளக் குறைப்பு, பணியுயர்வு நிறுத்திவைப்பு, பணிநீக்கம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் பெங்களூருவில் சுமார் 500 ஐ.டி பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெங்களூருவில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனங்களான 'சேம்பக் டிசைன்' நிறுவனம் 247 பேரையும், 'ஃபிளையிங் அவுட்' நிறுவனம் 97 பேரையும், 'மிஸ் டெக்' நிறுவனம் 60 பேரையும், 'ஹூலா இன்போடெயின்மெண்ட்' நிறுவனம் 30 பேரையும் பணி நீக்கம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல நிறுவனங்கள் கடந்த மாதச் சம்பளத்தையே ஊழியர்களுக்கு இன்னும் வழங்காத நிலையும் நீடித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT