Skip to main content

மன அழுத்தத்தால் மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட கரோனா நோயாளி...

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

bengaluru hospital incident

 

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தற்கொலை செய்துகொள்வது பெங்களூருவில் தொடர்கதையாகி வருகிறது.  

 

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 60 வயது பெண் ஒருவர் நேற்று இரவு மருத்துவமனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.  கடந்த 18 ஆம் தேதி பெங்களூருவின் ராஜகோபால் நகர் பகுதியில் வசிக்கும் 60 வயதான அந்தப் பெண் மற்றும் அவரது மருமகள், பேரன் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அன்றைய தினமே இவர்கள் மூவரும் பெங்களூரு கே.சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஒருவார காலமாக இவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையின் கழிவறையில் இன்று காலை தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் 60 வயதான அந்தப் பெண்.

 

நேற்றிரவு 2.30 மணியளவில் தனது மருமகளிடம் கழிவறைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற அவர் நீண்ட திரும்ப வராததால், அவரது மருமகள் கழிவறைக்குச் சென்று தேடிப் பார்த்துள்ளார். கதவை நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்காததால், சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்துப் பார்த்த போது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கரோனா பாதிப்பால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ள போலீஸார், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில், கடந்த சில தினங்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் மூவர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், "கரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் பயந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், அரசாங்கம் உங்களைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று பெங்களூரு நகரக் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலிக்கு சரமாரி கத்திகுத்து; காதலன் வெறிச்செயல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 lover stabbed his girlfriend who forced her to marry him

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் ஆதித்யா சிங்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவரும் இவர்' அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம் பெண் ஒருவரும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆதித்யா சிங்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆதித்யா சிங் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆதித்யா சிங்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஆதித்சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மறுபடியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் ஆதித்யா சிங்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கம் போல மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை ஆதித்யா சிங், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். பின்பு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில்  காதலிப்பதாக கூறி  ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆதித்யா சிங்கை தேடி வருகின்றனர்.

Next Story

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
benagaluru hotel incident at west bengal nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள் இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது. அதில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. அதே சமயம் சந்தேகத்தின் பேரில் பாஜக பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். 

benagaluru hotel incident at west bengal nia

இது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.