Advertisment

பாடப்புத்தகத்தில் தவறான புகைப்படம்..

mika

பறக்கும் சீக்கியர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங். காமன்வெல்த் போட்டியில் முதல் தங்கம் வாங்கிய வீரர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான இவரது கதை, பாக் மில்கா பாக் என்று திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் பர்ஹான் அக்தர் மில்கா சிங் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படமும் செம ஹிட் அடித்தது.

Advertisment

இந்நிலையில், மில்கா சிங் பற்றி மேற்குவங்க மாநில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த கட்டுரையில் மில்கா சிங் புகைப்படத்தை வைப்பதற்கு பதிலாக மில்கா சிங் கதாபாத்திரத்தில் நடித்த பர்ஹான் அக்தர் புகைப்படத்தை வைத்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை பர்ஹான் அக்தரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய புகைப்படத்தை வைத்திருக்கிறீர்கள். மில்கா ஜியின் புகைப்படத்தை மாற்றுங்கள் என்று மேற்குவங்க மாநில கல்வி அமைச்சரிடம்கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment
milka singh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe