பீகார் மாநிலத்தைச்சேர்ந்த பிச்சைகாரர் ரவீனித் குமார். 70 வயதான இவர் தெரு ஓரத்தில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஹந்தி, பிகாரி உள்ளிட்ட பல மொழிகளில் பாட்டுப்பாடி பொதுமக்களைச் சந்தோஷப்படுத்தி வந்த அவர், தற்போது ஆங்கிலப் பாடலைப் பாடியதன் மூலம் அம்மாநிலம் முழுவதும் வைரலாகி உள்ளார்.
கடந்த 1956-ம் ஆண்டு வெளியான அமெரிக்க பாடகர் ஜிம் ரீவ்சின் பாடல் ஒன்றை அவரைப் போலவே மிகவும் மெல்லிய குரலில் பாடி அசத்தியுள்ளார். இவரின் பாடலைக் கேட்கும் பலரும் ஒரிஜினல் பாடலை விட இவரின் பாடல் கூடுதல் சிறப்பாக இருப்பதாகக் கூறி வருகிறார்கள். தெருவில் மட்டுமே ஒலித்துவந்த அவரின் பாடலை இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் ஏற்றி மாநிலம் முழுவதும் பிரபலப்படுத்திவிட்டனர்.
Follow Us