
ஜார்க்கண்டில் வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை பாஜக பெண் நிர்வாகி ஒருவர் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியான சீமா பத்ரா பாஜக மகளிரணி நிர்வாகியாக உள்ளார். அவரது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வரும் சுனிதா என்ற பழங்குடியின பெண்ணை அவர் அடித்து சித்திரவதை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக புகார் வெளியான நிலையில் கடந்த வாரம் போலீசார் அந்த பழங்குடியின பெண்ணை வீட்டிலிருந்து மீட்டனர்.

சிகிச்சைக்காக அப்பெண் சேர்க்கப்பட்ட நிலையில் சீமாவை போலீசார் கைது செய்து செப்டம்பர் இரண்டாம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் குணால் சாரங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Follow Us