Advertisment

அப்பளம் கேட்டதற்காக அடிதடி... கலவர காடான கல்யாண மண்டபம்!

Beaten for asking for waffles...  wedding hall!

கூடுதலாக ஒரு அப்பளம் கேட்டதற்காக ஏற்பட்ட தகராறில் கல்யாண மண்டபமே களேபரமான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் முட்டம் பகுதியில் உள்ள கல்யாண மண்டபம் ஒன்றில் திருமண நிகழ்ச்சி ஜோராக நடைபெற்றுக்கொண்டிருந்தது. திருமண விருந்தில் மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது இரண்டாவது முறை அப்பளம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறியதாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் நிலைக்கு சென்றது. இதனால் மணமகன் தரப்பும், மணமகள் தரப்பு திருமண நிகழ்விடத்திலேயே மோதிக்கொண்டன. மேலும் இந்த மோதலில் கல்யாண மண்டபத்தில் உள்ள சேர் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் மண்டபத்தின் உரிமையாளர் முரளிதரன் இதனை தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் அவரும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த மோதலில் மொத்தம் 3 பேர் காயமடைந்து அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Advertisment

incident Kerala marriage
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe