டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Man vs Wild நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானதாகும்.

Advertisment

bear grylls about modi in man vs wild

இதற்கான மிக முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ். எதாவது ஒரு மோசமான சூழ்நிலையில் ஒரு மனிதன் தனித்து விடப்பட்டால், எப்படி உயிரை காத்து அங்கிருந்து தப்பிப்பது என்பதை விளக்கும் நிகழ்ச்சியான இது பல இளைஞர்களையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போன்ற பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது இந்திய பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில், இது குறித்து பேட்டியளித்துள்ள பியர் கிரில்ஸ், "சில ஆண்டுகளுக்கு முன்பு ஒபாமாவை அலாஸ்காவுக்கு அழைத்துச் செல்லும் அறிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதைப் போன்றது தான் தற்போது கிடைத்ததும். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால், இருவருமே சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Advertisment

பிரதமர் மோடி சுற்றுச்சூழலைப் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்ட மனிதர். அதனால்தான் அவர் என்னுடன் இந்த பயணத்திற்கு வந்தார். அவர் உண்மையில் ஒரு இளைஞனை போல காட்டில் நேரத்தை செலவிட்டார், அவர் அங்கு மிகவும் வசதியாக உணர்ந்தார். அவர் அவ்வளவு அமைதியாக இருந்தார், அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது" என தெரிவித்துள்ளார்.