Advertisment

பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம்; சென்செக்ஸ் 953 புள்ளிகள் சரிவு! 

Bear Dominance in Stock Markets; Sensex 953 points decline!

Advertisment

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 81.67 ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58 காசுகள் சரிந்திருக்கிறது.

கடந்த நான்கு தினங்களில் ரூபாயின் மதிப்பு 1.93 காசுகள் சரிந்துள்ளது. இதற்கிடையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 953 புள்ளிகள் சரிந்து 57,145 புள்ளிகளில் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 311 புள்ளிகள் இறங்கி 17,016 புள்ளிகளில் முடிந்தது. சர்வதேச பொருளாதார மந்தநிலை காரணமாக, நிதிச்சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறுவதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

nifty sensex Mumbai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe