Advertisment

பிசிசிஐ சட்ட விதிகளின் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி

BCCI The Supreme Court allowed the amendment of the law!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அமைப்பின் சட்ட விதிகளில் மேற்கொண்ட திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisment

ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைப் படி, தொடர்ந்து ஆறு ஆண்டுகள் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள், மூன்று ஆண்டுகளுக்கு பிறகே மீண்டும் அப்பதவிக்கு வர முடியும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த விதியை நீக்க பி.சி.சி.ஐ. புதிய சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது. இதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகள் தொடர வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

bcci
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe