Skip to main content

'கங்குலி உடல்நிலை சீராக உள்ளது' - மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

bcci president sourav ganguly apollo hospital


கங்குலி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, இம்மாதத் தொடக்கத்தில் மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கங்குலியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.

 

இதனையடுத்து கங்குலி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்தநிலையில், இன்று (27/01/2021) கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது. சவுரவ் கங்குலி தனது இருதய நிலையைப் பரிசோதித்துக் கொள்ளவே மருத்துவமனை வந்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

“போலீசை டார்லிங்னு கூப்பிட்ட போதை ஆசாமி” - நீதிமன்றம் அதிரடி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Kolkata court takes action Calling women 'darling' is a crime

கடந்த 2015ஆம் ஆண்டு, அந்தமானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மயபந்தர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீசார் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் நின்று கொண்டிருந்த ஜானக்ராம் என்பவர், பெண் போலீசாரை ‘டார்லிங்’ என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக, அந்த பெண் போலீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், ஜானக்ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு வந்த போது ஜானக்ராமுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. 

நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனை தீர்ப்பை எதிர்த்து, ஜானக்ராம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி ஜெய செங்குப்தா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘முன்பின் தெரியாத பெண்களை ‘டார்லிங்’ என அழைப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் குற்றங்களுக்கு ஈடானது. பாலியல் நோக்கத்துடன் இவ்வாறு அழைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கலாம்’ எனக் கூறினார். இதனையடுத்து, குற்றவாளியின் மூன்று மாத சிறைத் தண்டனையை ஒரு மாத சிறைத் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார்.