கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வார் என நீண்டநாட்களாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் நேற்று (26.07.2021) தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய எடியூரப்பா, தன்னை ராஜினாமா செய்யும்படி யாரும் நிர்ப்பந்திக்கவில்லையென்றும், தானாகவே ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த கர்நாடகா முதல்வராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எடியூரப்பாவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.