கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வார் என நீண்டநாட்களாகதகவல்கள் வெளியான நிலையில், அவர் நேற்று முன்தினம் (26.07.2021) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்தநிலையில், நேற்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ கூட்டத்தில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை தேர்தெடுக்கப்பட்டார். இவர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெஹ்லோட், பசவராஜ் பொம்மைக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.