fhgfx

Advertisment

ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை தாக்கல் செய்யக்கூடாது என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று காலை முதல் முழு அடைப்பு தொடங்கியுள்ளது. இதில் சுமார் 2கோடி அரசாங்க ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. போக்குவரத்து ஊழியர்களுடன் வங்கி ஊழியர்களும் இந்த முழு அடைப்பில் கலந்துகொள்கின்றனர். வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து இதில் அவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த முழு அடைப்பின் மூலம் நாடு முழுவது வாங்கி சேவை, போக்குவரத்து சேவை, ஆகியவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.