Advertisment

"அது அவரது கற்பனை"... பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு குறித்து அமைச்சர் விளக்கம்...

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு ஜனவரி 10 முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.

Advertisment

bapul supriyo about dilip gosh speech

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சில மாநிலங்களில் போராட்டங்களின் போது வன்முறை ஏற்பட்டு துப்பாக்கி சூடும் நடைபெற்றது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், "பொது சொத்துக்களை அழித்த மக்கள் தனது கட்சிக்கான வாக்காளர்கள் என்பதால் மம்தா பானர்ஜியின் காவல்துறை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நாங்கள் ஆட்சி செய்யும் உ.பி., அசாம் மற்றும் கர்நாடகாவில் உள்ள எங்கள் அரசு அவர்களை நாய்களைப் போல சுட்டுக் கொன்றது" என தெரிவித்தார்.

போராடிய மக்களை நாய்கள் என்று கூறிய திலீப் கோஷின் பேச்சு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, "திலீப் கோஷ் கூறியதற்கு பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. இது அவரது கற்பனை. உ.பி, அசாம், கர்நாடக போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த காரணத்திற்காகவும் மக்களை சுட்டுக் கொல்ல ஒருபோதும் முயலவில்லை. திலீப் கோஷின் பேச்சு பொறுப்பற்ற ஒரு செயல்" என தெரிவித்துள்ளார்.

bapul supriyo caa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe