/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2977.jpg)
புதுச்சேரி கடல்பகுதியை ஒட்டியுள்ளதால் அரசியல்வாதிகள் பிறந்தநாள், நடிகர்கள் பிறந்தநாள், புதிய படம் வெளியீடு ஆகியவற்றை வரவேற்கும் வகையில் புதுச்சேரி பகுதி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கடல் பகுதிகளில் பேனர் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடலில், ஆழ்கடலில் இதுபோன்று பேனர் வைக்க அனுமதி இல்லை என்ற போதிலும் ஆர்வ மிகுதியால் இதுபோன்று அடிக்கடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை புதுச்சேரி அஜித் ரசிகர்கள் நடிகர் அஜித்குமாரின் 30 ஆண்டு கால திரைப்பயணத்தை வரவேற்கும் வகையில் 60 அடி ஆழத்தில் ஆழ்கடல் பயிற்சியாளர் உதவியுடன் பேனர் வைத்துள்ளனர். இதனை வீடியோ எடுத்து அனைத்து சமுக வலைதளங்களில் பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)