Advertisment

லக்னோ ரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்க தடை... எதற்காக தெரியுமா..?

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ ரயில் நிலையம் மாநிலத்தில் உள்ள பெரிய ரயில் நிலையங்கள் ஒன்று. தொலைதூர ஊர்களுக்கு பயணம் செய்பவர்கள், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இடமாக அந்த ரயில் நிலையம் உள்ளது. மேலும், ரயில் நிலையத்திற்கு வெளியே சிறு வியாபாரிகள் சிலர் வாழைப்பழங்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் ரயில்களில் பயணிக்க வேண்டி அவசரமாய் சாப்பிடாமல் கிளம்பிவிடும் பயணிகள் கூட அங்கே விற்கும் வாழைப்பழங்களை வாங்கி கொண்டு செல்வார்கள். உடனடியாக பசி போக்கும் என்பதாலும், விலை குறைவு என்பதாலும் மக்களிடையே வாழைப்பழம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

Advertisment

gb

இந்நிலையில் வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கண்ட இடங்களில் வீசுவதால் ரயில் நிலையத்தை சுற்றி அசுத்தமாகிறது என்று கூறி ரயில் நிர்வாகம் வாழைப்பழ விற்பனையை தடை செய்துள்ளது. இதனால் பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, " வாழைப்பழத்தால் மட்டுமே ரயில் நிலையம் அசுத்தம் ஆவதை போன்று அதிகாரிகள் வாழைப்பழம் விற்பதை தடை செய்துள்ளார்கள். நீண்ட தூரம் பயணம் செய்யும் வயதானவர்கள் செரிமான பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள், அவர்களுக்கு வாழைப்பழம் உதவியாக இருக்கும். தற்போது வாழைப்பழங்கள் தடை செய்யப்பட்டுள்ளாதால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்கிறார்கள்.

railway station
இதையும் படியுங்கள்
Subscribe