வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசியை கருத்தில்கொண்டு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தன. இந்தக் கோரிக்கை குறித்து நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என கூறிய வங்கி ஊழியர் சங்கங்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தன.

bank strike from tommorrow

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதன்படி ஜனவரி 31-ந் தேதி, பிப்ரவரி 1-ந் தேதி, மார்ச் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மற்றும் ஏப்ரல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சுவார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்படாத காரணத்தால், அறிவித்தபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அறிவித்தபடி நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1) வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதன் மூலம், நாளை மற்றும் சனிக்கிழமை வங்கி சேவைகள் பாதிக்கப்படும். அடுத்த நாள் ஞாயிறு என்பதால் 3 நாட்கள் வங்கி சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.