
இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தநிலையில்ஆந்திர மாநிலத்திலும் கரோனாபரவல் அதிகரித்து வருகிறது.
பொது இடங்களில்முகக் கவசம்அணியவேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெலுங்கானாவில் வங்கிக்கு ஓய்வூதியத்தை வாங்கச் சென்ற விவசாயியான முதியவர் ஒருவரிடம் வங்கி அலுவலர் எங்கே முகக் கவசம்என வினவியுள்ளார். உடனே என்ன செய்வது என்று தெரியாத அந்த முதியவர்வீட்டுக்குச் சென்று குருவிக் கூட்டை கயிறு கட்டி முகக் கவசமாக அணிந்துமீண்டும் வங்கிக்கு வந்தார். இந்த காணொளிகள் மற்றும்புகைப்படங்கள்சமூக வலைத்தளத்தில்வைரலாகி வருகிறது.
Follow Us