Advertisment

'6 மாதத்துக்கு வட்டிக்கு வட்டியில்லை'- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

bank loans coronavirus lockdown interest cancelled officially announced by ministry of finance

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு, வட்டி மீதான வட்டி தள்ளுபடி குறித்த அறிவிப்பை மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாகமத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மார்ச் 1 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ஆம் தேதி வரை,வங்கிக்கடன் பெற்றவர்களின்ஆறு மாதக் கடன் தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி வசூல் இல்லை. தேசிய வங்கிகளில் ரூபாய் 2 கோடிக்கும் குறைவாகக் கடன் பெற்றவர்களுக்கு இச்சலுகை பொருந்தும். ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்துத் தேசிய வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கும் வட்டிக்கு வட்டி வசூல் இல்லை. சிறு, குறு தொழில் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன், நுகர்வோர் கடன், கிரெடிட் கார்டு, தனிநபர் கடன், வாகனக் கடன் பெற்றவர்களுக்கும் இச்சலுகை பொருந்தும். மாதத் தவணை (இ.எம்.ஐ) தள்ளிவைப்பு காலத்தில், முறையாக கடன் தவணை செலுத்தியவர்களுக்கு கேஷ்பேக் வழங்கப்படும்"எனத் தெரிவித்துள்ளது.

Advertisment

கரோனா பொது முடக்கக் காலத்தில், வங்கியில் பெற்ற கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்படுவதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ரூபாய் 2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. மத்திய அரசின் முடிவுக்கு ரிசர்வ் வங்கியும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், மத்திய நிதியமைச்சகம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

lockdown coronavirus UNION FINANCE MINISTER bank loans
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe