rahul gandhi

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏபிஜி ஷிப்யார்டு (ABG Shipyard) நிறுவனம் கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் தொழிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் இந்நிறுவனம் 22,842 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

Advertisment

இது நாடு முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ”மோடி ஆட்சியில் இதுவரை 5,35,000 கோடி ரூபாய் அளவுக்கு வங்கி மோசடிகள் நடந்துள்ளன. 75 ஆண்டுகளில் இப்படி ஒரு மோசடி நடந்ததில்லை” எனக் கூறியுள்ளார்.

Advertisment

மேலும் அவர், ”இந்த கொள்ளை மற்றும் மோசடி நிறைந்த நாட்கள், மோடியின் நண்பர்களுக்கு மட்டுமே நல்ல நாட்கள்” எனவும் கூறியுள்ளார்.