ADVERTISEMENT

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? காஷ்மீரில் கடையடைப்பு...    

11:04 AM Aug 06, 2018 | santhoshkumar

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வருகிறது. இதனால், ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு கட்டையடைப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீருக்கு 1954ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதன்படி, காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளும், சலுகைகளும் அளிப்பதுடன் காஷ்மீரில் மற்ற இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெறவோ, சொத்து வாங்கவோ இயலாது. நாடாளுமன்றத்தால் இயற்றப்படாத 370 சட்டப்பிரிவு செல்லாது என்றும், அரசியல் சட்டப்பிரிவு 368-ன் படி நாடாளுமன்றத்துக்கே அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய அதிகாரமுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று விசாரிக்க இருக்கும் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாமா என்பதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முடிவுசெய்யயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT